மது விலக்குக்கு ஆதரவாக சென்னை த.மா.கா. சார்பில் வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஐயா ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது

து விலக்குக்கு ஆதரவாக சென்னை த.மா.கா. சார்பில் வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஐயா ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 200 கையெழுத்து படிவங்களை மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசனிடம் ஒப்படைத்தார்.

வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 964 கையெழுத்து படிவங்களை மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ வழங்கினார்.

அப்போது காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் தாம்பரம் மணி ஏற்பாட்டில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் சுமார் 50 பேர் த.மா.கா.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் லயன் கண்ணன், கக்கன், ஜாய், சாந்தகுமார், மணி, பிரபு, சண்முகம், திருவேங்கடம், தலைமை நிலைய செயலாளர் டி.எம்.பிரபாகர், லோக நாதன், மைதிலி ஞானசேகர், சுதாகர், இந்திரா, சுகுமாறன், மாங்காடு பேரூர் தலைவர் ராஜேந்திரன், யேசுதாஸ், சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.