“உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு, தாமதமாக துவங்கப்பட்டுள்ளது,’

உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு, தாமதமாக துவங்கப்பட்டுள்ளது,”

த.மா.கா., தலைவர் ஐயா ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், பொதுக்கூட்டம், திருவண்ணாமலையில் நடந்தது.

முன்னதாக,
தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு காலதாமதமாக நடத்தப்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும்.

வர்த்தக ஒப்பந்தம் போடப்படும் போது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் போடவேண்டும்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில், ஒப்பந்தம் போட வேண்டும். தொழிற்சாலைகள் துவங்குவதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி படுத்த வேண்டும்.

சிறு, குறு தொழில்கள் பாதிக்கக்கூடாது என்றார்