மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் செயல்படவேண்டும் புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தமிழகத்தில் முதற்கட்டமாக 32 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதர்க்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். அதில் இதுவரை 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக நினைக்கின்றேன். இயக்கத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளோம். அதன்பின்னர் கட்சிக்கு முழுவடிவம் கொடுப்போம். மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனாக்குமாரி கமிஷன் கூட்டு அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. அப்படி ஏற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் வெளிநாட்டினருக்கு கப்பல் மூலம் மீன்பிடிப்பதற்கான எந்த உரிமையும் வழங்கக்கூடாது. இரண்டு தலைவர்கள் சந்தித்து பேசினால் உண்மைநிலையை சந்தித்து பேசும் தலைவர் வெளிப்படுத்த வேண்டும் அப்படி வெளிப்படுத்தவில்லை என்றால் தற்போது அருன்ஜெட்லி ஜெயலலிதா சந்திப்பிற்கு பிறகு பல தலைவர்கள் பல கருத்துகள் பேசிவரும் நிலை ஏற்படும். தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் செயல்படவேண்டும். மின்சார கட்டணம் குறைக்கவேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைதொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.