மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் தமாகா இடம் பெறும் – ஜிகே வாசன்

தேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. த.மா.கா.வை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் கருத்துக்கள் கேட்டு வருகிறோம் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி அமைத்து தான் போட்டி என்பது இல்லை.

எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ முடிவை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் அகில இந்திய தலைமையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நியமன தலைவர்களுக்கும் த.மா.கா. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது துணை தலைவர் கோவை தங்கம், சக்தி வடிவேல், சேகர் மாநில செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *