கிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கிராமப்புற மக்கள் பட்டா மாற்றம் செய்யவும் வரி செலுத்தவும், மானியங்களை பெறவும், வருவாய் சான்று மற்றும் அரசின் பல்வேறு சேவைகளுக்காகவும் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு ஒரு கிராம சேவை மையம் என்ற ரீதியில் ஒரு மையத்துக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12,524 ஊராட்சிகளில் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தை மகளிர் சுய உதவிக்குழுவினரும் கூட்டம் நடத்துதல் உட்பட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி அரசின் சேவைகள் கிராமப்புற மக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிரமமின்றி, விரைவில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்போது அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *