கஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது.

ஆனால் மத்திய அரசு ரூ.354 கோடி ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப் பொரி போல் உள்ளது.

#மத்தியஅரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. எனவே மாநில அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதிகளில் 200 புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளதாகச் செய்தி வெளியாகி இருப்பது கண்டிக்கத்தக்கது.

புயல் பாதிப்பால் 15 ஆண்டுகள் வாழ்வில் பின்னோக்கி விவசாயிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் வீடு, தோட்டத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ஆனால் புயல் பாதித்த மக்களிடமிருந்து வருவாய் பெறும் வகையில் அவர்களைச் சீரழிக்கும் திட்டமாக
மதுக்கடைகளைத் திறக்கவிருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே, #தமிழகஅரசு மனிதாபிமானத்தோடு செயல்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது.

#பெண்கள்#மாணவிகளின் தங்கும் விடுதிகளில் #ரகசியகண்காணிப்பு கேமராக்கள் மூலம் நடக்கும் கொடுமைகள் சம்பந்தமாக, அனைத்து விடுதிகளையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

#விவசாயநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

அதற்கு மாற்றாக கேபிள் லைன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கைத்

தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமனம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *