தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அரசாணை எண் 206 இல், நகர்புறங்களில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள் 700 முதல் 1,500 சதுர அடி பரப்பளவிலும்,
கிராமப்புறங்களில் இவை 500 சதுர அடி பரப்பளவிலும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையால் ஏற்கெனவே உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூடப்படக்கூடிய நிலை ஏற்படும்.
இது ஏற்புடையதல்ல. இந்த அரசாணை பெரிய கார்ப்பரேட் பரிசோதனை நிலையங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனவே, தமிழக அரசு அந்த அரசாணையில் திருத்தம் செய்து ஏற்கெனவே உள்ள நகர்புற, கிராமப்புற ரத்தப் பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பரிசோதனை நிலையங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணத்தைக் குறைக்கவும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டணத்தை மாதம்தோறும் ரூ. 500 என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும்.
அத்துடன், மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் ஆலோசனைக் குழுவில் ரத்தப் பரிசோதனை நிலைய ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்கவும் அரசு முன்வரவேண்டும்.
