திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், வாழைதாருடன் முறிந்து விழுந்து மிகுந்த சேதம் அடைந்துள்ளன. அறுவடை செய்ய இருந்த நிலையில் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்துள்ளனர். ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழைகள் பயிரிடப்படுகிறது. இதற்கான உற்பத்திக்காக ரூ.3 லட்சம் முதல் ரூ.3½ லட்சம் வரை செலவாகிறது.
ஆகவே தமிழக அரசு உடனடியாக சேதப்பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை கணக்கிட்டு வாழை ஒன்றுக்இதுபோன்ற இழப்பு இனிமேல் ஏற்படாமல் காக்கவேண்டும். தோட்டக்கலை மற்றும் வருவாய்துறை இதில் அதிக கவனம் செலுத்தி முறையான பாதிப்புகளை கண்டறிந்து, அதற்கான இழப்பீட்டு அறிக்கையை தாமதம் இல்லாமல் தமிழக அரசிடம் அளித்து, அதற்கான இழப்பீட்டை போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.கு ரூ.350 இழப்பீடு வழங்கவேண்டும். அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்கவேண்டும். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முறையான ஆராய்ச்சி செய்து வாழை உற்பத்தி, நோய், இயற்கை சீற்றம், மழை மற்றும் சூறாவளி காற்றிலிருந்து எவ்வாறு காப்பது போன்ற செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தவேண்டும்
