தமிழக அரசு மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால், மக்கள் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், துணைத் தலைவர் ஞானதேசிகன், ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு தனி மனித உரிமையில் தலையிடுகிறது என்றும், இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் கூறினார். தமிழக சட்டப்பேரவை நிகழ்வு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், தமிழக அரசு மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால், மக்கள் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளதாக கூறினார்.
