தென்காசி புதிய மாவட்டம்:த.மா.கா.,வாசன் கோரிக்கை

திருநெல்வேலி:தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் எனத.மா.கா.,தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்தார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜி.கே.வாசன் நேற்று மாலையில் நெல்லை வந்தார்.நெல்லை மாவட்ட தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூடங்குளம் அணுமின்நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் போன்றவற்றில் இன்ஜினியரிங் மாணவர்களுக்குபயிற்சிபெற அனுமதிக்கவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவருவதை எதிர்த்து போராடுவோம்.

தாதுமணல் தொழிற்சாலைகளை இயக்கினால் மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இருப்பினும் அதில்ஊழல், முறைகேடு இருந்தால் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தவேண்டும் என்றார்.

கூட்டத்தில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து திரளானவர்கள் த.மா.கா.,வில் இணைந்தனர்.

நிகழ்வில் மாநில செயலாளர்கள் சரவணன், சார்லஸ், சிந்தா சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள்ஜோதி, சுத்தமல்லிமுருகேசசன், அய்யாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *