த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:-
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் சுர்ஜித்சிங் பர்னாலா சண்டிகார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
மத்திய அமைச்சர், பஞ்சாப் மாநில முதல்வர், தமிழக கவர்னர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு பேரிழப்பாகும். இவ்வாறு கூறியுள்ளார்.
