வார்தா புயல் பாதிப்பு: மத்திய அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வார்தா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியாக 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த 4 லட்சம் ரூபாய் போதுமானதல்ல. எனவே தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையைப் பெற்று அதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக கொடுக்க வேண்டும்.

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு- நிவாரணப் பணிக்காக 1000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இத்தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *