காவிரி நதிநீர் டெல்டா விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வேலூர் மாவட்ட மக்களுக்கும் உயிர் நாடி பிரச்சினையாக விளங்குகிறது.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல் படும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் போக்கும் அரசியல் பின்னணியில் செயல் படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
மீனவர்கள் பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது. இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நாளை நடக்கவிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கைது விவகாரம் சுமுக சூழ்நிலையை பாதிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆந்திர பகுதிக்கு கூலி வேலைக்கு செல்லும் அப்பாவி தமிழர்களை தொடர் நடவடிக்கையாக ஆந்திர அரசு கைது செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்வது முதலானவை கண்ணடத்திற்குறியது
பொதுசிவில் சட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் முற்றிலும் புறக்கணிக்கிறது இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மணமாற்றம் தேவை என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய மிக்க வீர விளையாட்டு வெளிநாட்டவர்கள் கூட இதை பார்க்க வருவது வாடிக்கை யாக இருக்கும் நிலையில் அரசு இதை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து தமிழக பாஜகவின் தொடர் முயற்சி தோல்வி அடைவது ஏமாற்றம் அளிக்கிறது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அபாயகரமான விஷயம் அரசு இதை கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ளன. ஆகையால் சுங்கச்சாவடி கண்டனத்தை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.
