2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்: தஞ்சையில் ஜி.கே.வாசன் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று 15 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் உள்பட 1,964 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் 48 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், வர்த்தக அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி ரெயில் மறியல் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,863 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்வதற்காக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு கும்பகோணத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கள் ரெயில் மீது ஏறி நின்றும் கோஷங்கள் எழுப்பினர்.

ஜி.கே.வாசன் கைது

இதே போல் த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வழியாக திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து அவர்கள் கோஷமிட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கத்தினரும் தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 15 இடங்களில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன், வெள்ளையன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் உள்பட 1,964 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதியை சந்திப்போம்

தஞ்சையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் 48 மணி நேர போராட்டம் முழு வெற்றியை அடைந்துள்ளது. முதன் முறையாக விவசாயிகள் போராட்டம் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளை காக்கும் நடவடிக்கையை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை எனில் விவசாயிகளை திரட்டி சென்னையில் பேரணியாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். காவிரி மே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *