இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 10 மாநகராட்சிகளில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். 169 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட பின்னர், இன்னும் 3 நாட்களில் முழுமையான பட்டியல் வெளியாகும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலின் படி, சென்னை மாநகராட்சியில் 64 இடங்களிலும், மதுரையில் 10 இடங்களிலும், கோவையில் 8 இடங்களிலும், திருப்பூரில் 40 இடங்களிலும், ஈரோட்டில் 20 இடங்களிலும், தூத்துக்குடியில் 5 இடங்களிலும், தஞ்சையில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 5 இடங்களிலும், திருச்சியில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.






