ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தகுந்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டியது அவசியம் என்றார். அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வாசன் கேட்டுக் கொண்டார்.
