தமிழகத்தில் 7 ஆண்டுகளாக குறுவை பாதித்துள்ளது.
நிகழாண்டு சம்பா சாகுபடி நடை பெறுமா என்பது சந்தேகம் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண் டு சம்பாவுக்கு தண்ணீர் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு
விகிதாசாரப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை மத்திய அரசு உடனடியாக பெற்றுக் கொடுப்பதுடன், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று
திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள்தலைவர் ஐயா ஜி.கே. மூப்பனாரின்
85-ஆவது பிறந்த நாள் மற்றும் விவசாயிகள் தினவிழா பொதுக் கூட்டத்தில்,
த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பேச்சு
