ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழாவை (ஆக. 19) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாயிகள் தினமாக கடைப்பிடிக்க உள்ளது.
இதுகுறித்து தமாகா தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாள் விழாவான ஆக. 19-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திரூவாரூரில் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டம் ஆக. 19-ல் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சிறப்புரையாற்றுகின்றார். எனவே பொது கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட, நகர, வட்டார, வார்டு, பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
