பெரம்பலூர் : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பலூரில் அளித்த பேட்டி: சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினர் தங்களது கடமைகளை முறையாக, சரியாகச் செய்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. அதே நேரம் முறையாக, சரியாக எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் கிராமங்கள் அளவில் உயரதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கொலை, கொள்ளை, திருட்டு போன்றவை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜிஎஸ்டி மசோதாவை எதிர்க்கிறோம் என்றார்.
