மகசேசே விருது பெறும் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கும், சமூக ஆர்வலர் வில்சனுக்கும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகசேசே விருது பெறும் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கும், சமூக ஆர்வலர் வில்சனுக்கும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கும், சமூக ஆர்வலர் வில்சனுக்கும் பிலிப்பைன்ஸ் அகாடமியின் மகசேசே விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
தமிழகத்தைச் சேர்ந்த இசை கலைஞர் கிருஷ்ணா இசை என்பது ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, சாதிக்கு மட்டும் சொந்தமல்ல,
சாதாரண மனிதரும் இசையைக் கற்று கொண்டு ஒரு உன்னத நிலையை அடையலாம் என்ற அடிப்படையில் அடித்தட்டு மக்களுக்கும் இசையை கற்றுக் கொடுத்துகொண்டு வருபவர். இசைக்காக அவர் ஆற்றிவரும் சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இந்த விருது கிடைத்திருப்பது அவருக்கு ஓர் மிகப்பெரிய அங்கீகாரம்.
வில்சன் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை நீங்க வேண்டும் என்பதற்காக கடந்த 32 ஆண்டுகளாக பாடுபட்டு வருபவர். இவரது தொடர் பணியால் இலட்சக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் சமூக அநீதியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். வில்சனின் இந்த சமூக நலப் பணியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
மகசேசே விருது பெறுவதன் மூலம் இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா, வில்சன் ஆகியோர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களது பணி மேன்மேலும் வளர, சிறக்க, உயர த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்,
இவ்வாறு அவர்அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *