தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தமாக தலைவர் வாசன் கருத்து தெரிவித்துள்ளார். விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்று வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்க முறையான செயல்திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை எனவும் வாசன் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலனை செய்வது தொடர்பாக உறுதியான அறிவிப்பு ஏதும் இல்லை என்றும், நிதிச்சுமையை சமாளிக்க வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.
