தமிழக அரசு ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

தமிழக அரசு ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சுமார் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது பணி நியமன ஆணைப்படி 3 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்களை அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வந்தார்கள். தற்போது அந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர்கள் தங்கள் பணியில் அவர்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களது பணி என்பது மிகவும் அவசியமான, முக்கியமான பணியாகும். எனவே தமிழக அரசு செவிலியர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *