தமாகா வேட்பாளரை ஆதரித்து பாபநாசத்தில் பிரசாரம் துவக்கம்

தமாகா வேட்பாளரை ஆதரித்து பாபநாசத்தில் நாளை தமாகா தலைவர் திரு.ஜி. கே. வாசன் பிரசாரத்தை துவக்குகிறார்.

காலை 10 மணிக்கு பாபநாசம் கடைவீதியில் தமாகா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரசாரத்தை துவக்குகிறார். இந்த கூட்டத்திற்கு தமாகா மாநில செயற் குழு உறுப்பினர் ஐயா ஜி. ஆர். மூப்பனார் தலைமை வகிக்கின்றார்.

மாநில செயற் குழு உறுப்பினர்கள் ஐயா ஜி. சந்திர சேகர மூப்பனார், ஐயா ஜி. சுதாகர் மூப்பனார்,
ஐயா எஸ். சுரேஷ் மூப்பனார், தே. மு. தி. க, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பரமசிவம், ம. தி. மு. க மாவட்டச் செயலாளர் உதய குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருஞானம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழருவி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பின்னர் 11 மணிக்கு திருவையாறு தியாகராஜர் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் நலக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Security Question * Time limit is exhausted. Please reload CAPTCHA.