அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன்

காமராஜரைப்போன்று பொதுநலத்தோடு செயல்படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.

என்று த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

நெல்லையில் திரு.ஜி.கே.வாசன் பிரசாரம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

நெல்லை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாடசாமி, பாளையங்கோட்டை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் நிஜாம் ஆகியோரை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் திரு.ஜி.கே.வாசன் நேற்று பிற்பகல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இருந்தபோதிலும் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை.

இதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் பொதுநோக்கத்துடன் ஆட்சி செய்யவில்லை.

தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி பொது நலத்தோடு மக்களுக்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற நடைபெற்றது. அதேபோல் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நல்ல தலைவர்கள் ஒருங்கிணைந்து தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

இந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி ஆகும்.

இந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொன்னதை செய்வார்கள், தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு மாற்றம் ஏற்பட வேண்டும். காமராஜர் ஆட்சி போன்ற வெளிப்படையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஊழல் செய்வதையே ஆட்சியாக கொண்டு உள்ளார்கள்.

அதற்கு மாற்றம் தேவை, அதற்காக குடும்ப ஆட்சி வரக்கூடாது. நேர்மையான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா.வால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.

ஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *