#யோகாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.

மத்திய அரசே #பெட்ரோல் விலையை நிர்ணயிக்க வேண்டும். அது அவர்கள் கடமை. நாள்தோறும் விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற வேண்டும்.

#யோகாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் நலன் கருதி கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.

#போக்குவரத்துஊழியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் விழாக்காலங்களில் மக்கள் அவதிப்படுவார்கள்.

எனவே பேச்சு வார்த்தையில் நல்ல முடிவை எட்ட அரசு முயற்சிக்க வேண்டும்.

#என்எல்சி-யில் பணிபுரியும் 80 சதவீத ஒப்பந்த தொழிலாளர்களை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச #ஊதியத்தொகை, பஞ்சப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை, புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படவில்லை.

வரும் புதன்கிழமை #மத்தியதொழிலாளர்நலஆணையத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஒரு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும்.

#ஜி_கே_வாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *