முருக கடவுளின் பெருமையை கூறும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்

தமிழர்களுடைய கடவுளான முருகனை, இழிவுப்படுத்தும் வகையிலேகந்தசஷ்டி கவசப் பாடலின் பொருளை, பெருமையை, தவறான பொருள்படதிருத்தி வெளியிடப்பட்டுள்ளது, இச்செயல் கோடிக்கணக்கான பக்தர்களின்உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கதக்கது. மிகுந்தவேதனைக்குரியது. மதங்களைப் பற்றிவெளிப்படையாக, அவதூராக பேசுவதற்குயாருக்கும் உரிமையில்லை. குறிப்பாக எம்மதமானாலும்நம்பிக்கையை இழிவுப்படுத்துவது, மதத்தை அவமானப் படுத்துவதுதாகும்.எனவே இதனை தவறான நோக்கத்தோடு வெளியிட்ட “கருப்பர் கூட்டத்தினர்”மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மறைந்த தலைவர்களை அவமதிக்கும் வகையிலே செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்றசம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தவறு செய்தவர்களுக்கு கடும்தண்டனை கொடுக்க வேண்டும், என்று தமிழ் மாநில காங்கிஸ் சார்பாககேட்டுக்கொள்கிறேன்.#ஜி_கே_வாசன்தலைவர்#தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tmcfortn#tnpolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *