நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்

தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை த.மா.கா ஆதரிக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.கவினுடைய வெற்றியை உறுதி செய்யக் கூடிய வகையில் களப் பணியாற்றுவார்கள். 

இன்று தமிழக அரசு, அதனுடைய முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் விரும்பக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை கொடுத்து அதனை பெருநகரம் முதல் கிராமம் வரை சென்றடையக் கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல தமிழக முதல்வரின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணமானது தமிழகம் தொழில் துறையில் மேலும் முன்னேறவும், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொடுப்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது

தமிழககத்தின் பொருளாதாரமும், முதலீடுகளும் சாதகமான சூழலில் இருப்பதாக பொது நிதி மற்றும் கொள்கை தேசிய நிறுவன பேராசியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

தேசிய வளர்ச்சி விகிதமான 6.81 சதவீதத்தைவிட தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *