த.மா.கா சார்பில் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்-ஜி_கே_வாசன்

தைப்பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான சிறப்பான பண்டிகையாகும். “தை பிறந்தால் வழி பிறக்கும்”

என்பதற்கேற்ப பொங்கல் பண்டிகையானது தமிழர்களுக்கு நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அமைகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தை முதல் தேதியில் தொடங்கும் பொங்கல் பண்டிகை தனிப்பெரும் விழாவாக தமிழ் நாட்டிலும் மற்றும் தமிழர்கள் வாழும் இந்தியாவின் பிற மாநிலங்கள் உள்ளிட்ட பிற அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதாவது போகிப் பண்டிகை, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நாமெல்லாம் இயற்கையைப் பாதுகாக்கவும், மற்ற உயிர்களை நேசிக்கவும், சாதி, மத, இன, மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையாக, அன்போடு பழகவும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்கள் வாழ்வில் புதியன புகுந்து அவை நல்லவையாக அமைந்து அவர்களின் வாழ்வு மேம்பட இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டுகிறேன்.

விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளிகள் தான் அனைவரது உணவுக்கும் உழைக்கும் வர்க்கம்.

விவசாயிகள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை தை மாதம் அறுவடை செய்து பொது மக்களின் உணவுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் உயர்வானவர்கள்.

பொங்கல் நாளில் புத்தாடை உடுத்தி, மஞ்சல் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப்பானையிலிட்டுப் புது அடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் செய்து, கரும்பு வைத்து இறைவனை வணங்கி, சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு, உபசரித்து மகிழ்வது தமிழர்களின் உழைப்பையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நிலைநிறுத்துகிறது.

இனி வரும் காலத்தில் தமிழகத்தில் விவசாயத்தொழில் மேம்படவும், விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வாழ்க்கை முன்னேறவும் மத்திய மாநில அரசுகளும், பொது மக்களும் ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

தமிழர்கள் அறுவடைத்திருநாளான பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி நலமுடன், வளமுடன் வாழ த.மா.கா சார்பில் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *