தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல

தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5 கோடியே 79 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் ஆய்வு அமைப்பு கடந்த 7 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சுமார் 120 தொகுதிகளில் 5,464 பேரிடம் மட்டுமே கருத்துக்களை கேட்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

பொதுவாக கருத்துக் கணிப்பு என்பது மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு மக்களின் எண்ணங்களுக்கு நேர்மாறாக மக்களை திசை திருப்பும் வகையில் உள்நோக்கத்தோடு மக்களை குழப்பும் வகையிலும், தவறான வகையிலும் அமைந்திருக்கிறது.

குறிப்பாக தமிழக வாக்களர்களின் மனநிலையையும் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து தரப்பு மக்களின் உண்மை நிலையையையும் பிரதிபலிக்கக் கூடிய கருத்துக் கணிப்பாக இது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகள், அதன் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் நிலவும் சூழ்நிலையில், தற்போது வந்திருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு நடுநிலையோடு இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

மொத்தத்தில் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படுத்தக் கூடிய கருத்துக் கணிப்பாக இல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. எனவே தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல.

G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *