தமிழ் மாநில காங்கிரசின், தமிழக விவசாய அணித் தலைவர் திரு. புலியூர். நாகராஜன் அவர்கள் கொரோனா நோய் தாக்கத்தால் மறைந்தது, தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரசிற்கும் பேரிழப்பாகும்

தமிழ் மாநில காங்கிரசின், தமிழக விவசாய அணித் தலைவர் திரு. புலியூர். நாகராஜன்அவர்களது திடீர் மறைவு மிகுந்த அதர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் திரு.ஜி.கே. மூப்பனார் அவர்களது கொள்கைகளை பின்பற்றி தமிழ் மாநில காங்கிரசின் வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாக பணியாற்றியவர். மக்கள் தலைவர் திரு.ஜி.கே. மூப்பனார் அவர்களது பிறந்தநாளை விவசாயிகள் தினமாக அறிவித்த பிறகு, வருடம்தோறும்விவசாயிகள் தினமாக அனுசரித்து மிக சிறப்பாக கொண்டாடியவர். இத்தினத்தில் விவசாயிகளுக்கு பலநலதிட்டங்களை நமது இயக்கத்தின் மூலமாகவும், அரசின் மூலமாகவும் கிடைக்க பாடுப்பட்டவர்.தனது இறுதி மூச்சுவரை விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும்,ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என்று போராடி பலமுறை சிறை சென்றவர். விவசாயிகளின்கோரிக்கைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும், பல சமயங்களில் விவசாய பிரதிநிதிகளோடு டெல்லிசென்று அவர்களது உரிமையை பெற வாதாடிப் போராடியவர். தமிழகத்தில் உள்ள விவசாயசங்கங்களோடும், தலைவர்களோடும், விவசாய பிரச்சனைகளுக்காக, தீர்வுகளுக்காக தொடர்ந்துஆலோசனை செய்தவர். சில நாள்களுக்கு முன்னர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவனை செல்வதற்கு முன்னர் கூட, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு விரைவில்வரவேண்டும் வழிவகை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக, தமிழக முதல்வர், விவசாயத்துறை அமைச்சர்,தமிழக விவசாயதுறையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளையும், பல்வேறு மாவட்ட ஆட்சியாளர்களையும்,சந்தித்து மனு கொடுத்து, பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவை நிறைவேற அயராது பாடுப்பட்டவர்.சில நாள்களுக்கு முன்னர் கொரோனோ நோயின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டுமருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட திரு. புலியூர்.நாகராஜன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இவரது இழப்பு, அவரது குடும்பத்தாருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும்,பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.#ஜி_கே_வாசன்தலைவர்#தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tmcfortn#TNPolitics

150Jeeva Kamaraj Swamimalai, Vadalur Anbu and 148 others97 Comments26 Shares

Like

Comment

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *