தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை வலியுறுத்தி வருகிற 5–ந்தேதி போராட்டம்

IU

தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்
த.மா.கா செயற்குழு கூட்டம் சென்னையில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–
*தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி வருகிற 5–ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
*காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15–ந்தேதி தஞ்சாவூரில் த.மா.கா. பொதுக்கூட்டம் நடக்கிறது.
* பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் உற்பத்தி இல்லை. வளர்ச்சி இல்லை. வெறும் வாய் சவடால் மட்டும்தான் நடக்கிறது. இந்த செயலற்றதன்மைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
* தனியார் பள்ளிகளில் ஏழை எளியோருக்கு கட்டணம் இல்லாமல் 25 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.
* தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நன் கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
* மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.