தமிழகத்தின் மாற்று சக்தியாக ஜி.கே.வாசன் வருவார்

ஈரோடு, நவ. 20–

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் புது கட்சி தொடங்க உள்ளார். திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சி பெயர், கொடி போன்றவற்றை அறிவிக்கிறார்.

இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் கூட்டம் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மேலிட பார்வையாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜி.கே.வாசனின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். மாநாட்டில் 5 லட்சம் பேர் கூடுவார்கள். இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். ஜி.கே. வாசன் தமிழகத்தின் மாற்றுசக்தியாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஆறுமுகம், தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.என். பாலசுப்பிரமணியம், சரவணன், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Courtesy: Maalaimalar

One thought on “தமிழகத்தின் மாற்று சக்தியாக ஜி.கே.வாசன் வருவார்

  1. tamilaga arasiyalil asaikkamududiyatha ,sakithiyai ayya avargal varuvar,,,,,,,, kamarajarin kanavai ayyavin thalamaiyal niraivetrruvom ,,,,,,,,,,

Comments are closed.