தஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக, சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது. எனவே, இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *