சின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில்,

“கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக மாறி உள்ளது.

ஆகவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அந்த யானையை கும்கியால் தொந்தரவு செய்யாமல் அரசு போதிய பாதுகாப்பு அளித்து பாதுகாப்பான முறையில் மீண்டும் வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல்அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.

நியாய விலைக்கடை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசே உடனே தலையிட்டு, பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை வாகன நிறுத்தத்தில் தமிழகத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றம் சென்று தமிழக அரசே நிலைநாட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ஜி.கே.வாசன் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஏற்றாற்போல், தமிழ் மாநில காங்கிரஸ் உரிய நேரத்தில் பொதுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.

உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து மேற்குவங்க சிபிஐ விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,

மேற்கு வங்க விவகாரத்தில் நீதிமன்றம் சில கோட்பாடுகளை விதித்துள்ளது. அதனை அம்மாநில அரசும் சிபிஐயும் முறையான வழிகாட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *