காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது . தமிழக அரசு கொள்முதல் மையங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் . மழை காரணமாக ஈரப்பதம் உள்ள நெல்லை , அதிகாரிகள் திருப்பி அனுப்பாமல் அனைத்து இடங்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும் . இம் மாதம் ( செப்டம்பர் ) இறுதிக்குள் குறுவை நெல் கொள்முதல் செய்வதை அரசு முடித்துக் கொள்ள இருப்பதாக வந்த தகவலால் , விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர் . அரசு கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொண்டால் விவசாயிகள் தனியார் வியாாபரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் . இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் . ஆகவே விவசாயிகளின் நலன் கருதி குறுவை அறுவடை முழுமையாக முடியும் வரை அரசே தொடர்ந்து கொள்முதல் செய்ய வேண்டும் . டெல்டா மாவட்டங்களில் உள்ள சிறு , குறு விவசாயிகள் குறுவை நெல்லை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து வைத்துக்கொள்ள தேவையான வசதிகள் இல்லாததால் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் . மேலும் அதிகமான கொள்முதல் மையங்கள் திறந்து அரசு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .#ஜி_கே_வாசன்தலைவர்#தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tmcfortn#tnpolitics#corona#lockdown#quarantine