கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் – தேவைக்கேற்ப, கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மணல் தட்டுப்பாடும், மணல் கொள்ளையும் அதிகரித்துகொண்டே போனதாலும், ஆற்றுமணல் முறையின்றி அதிக அளவில் அள்ளப்படுவதால் நீர்மட்டம் குறைவதாலும், மணல் விலை உயந்துகொண்டே போனதாலும் கட்டுமானப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலையின்றி இருந்தனர். இச்சூழலில் மணல் கொள்ளை சம்பந்தமாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் தமிழக அரசு பொதுப்பணித் துறை மூலம் மணல்

ஆனாலும் பல ஆற்றுப்படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது வெட்ட வெளிச்சமாயிருந்தும் அதனை கண்டும் காணாமல் தமிழக அரசு இருக்கிறது. அது மட்டுமல்ல பொதுப்பணித் துறையின் மூலம் இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ளலாம், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரை மணல் அள்ளக்கூடாது, குறிப்பிட்ட அளவு மணல் தான் அள்ள வேண்டும், மனிதர்களை கொண்டு தான் மணல் அள்ள வேண்டும் போன்ற விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இவையெல்லாம் முறையாக பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட ஆரணி ஆற்றில் மணல் எடுப்பதற்கும், கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதற்கும் டெண்டர் விடப்பட்டும் மணல் அள்ளுவதற்கு லாரிகள் இல்லை என்று கூறி, குத்தகைக்கு விடப்படுவதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு என்பதால், பொதுப்பணித் துறையின் நேரடி கண்காணிப்பில் மணல் அள்ளுவதற்கான முழு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட ஆறுகளில் இருந்து அளவுக்கு அதிகமான மணல் பல மடங்கு அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தபோதும் அது தொடர்பாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்.

மேலும் அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜிஎஸ்டி வரியும் சேர்த்து 840 ரூபாய். ஆனால் சந்தையில் ஒரு லோடு மணலானது குறைந்தது ரூபாய் 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனையெல்லாம் தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *