எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது. மாறாக சிறந்ததொரு கூட்டாட்சி ஏற்படும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலி நகரத்தில் தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது
* திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. இதைப் போக்கும் வகையில் புறவழிச்சாலைகள், சுற்றுவட்ட சாலைகள் அமைக்கப்படும்.
* குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றி புதிய பாலம் விரைவில் அமைக்கப்படும்.
* தாழையூத்தில் நான்குவழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும்.
* மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை அதிகமுள்ளது.
* தன்னிறைவை ஏற்படுத்தும் பெரிய குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கப்படும்.
* பெண்கள் நலன் காக்கும் வகையில் திருநெல்வேலியில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
* பாளையங்கோட்டையில் பெண்களுக்கான பிரத்யேக அரசு தொழிற்கல்லூரி அமைக்கப்படும்.
* அரசு சித்த மருத்துவக் கல்லூரி தேசிய தரத்துக்கு உயர்த்தப்படும்.
எங்கள் கூட்டணி சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாடசாமியும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கே.எம்.ஏ.நிஜாமும் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு முறையே கொட்டும் முரசு, பம்பரம் சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnelection2016