“தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.கடந்த சில மாதங்களில் பலபேர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்தது. இதனால் பல நடுத்தர குடும்பத்தினர் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையால் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் லாட்டரி சீட் வாங்கி பணத்தை இழந்தனர்.இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை உணர்ந்த தமிழக அரசு அவற்றுக்குத் தடை செய்தது. அதே போல், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து அவரச சட்டம் கொண்டு வந்த தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” .#ஜி_கே_வாசன்தலைவர்#தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tmcfortn#tnpolitics#corona#lockdown#quarantine